செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவரது மனைவி வைதேகி (23). இந்தத் தம்பதிக்கு யாஷிகா (2) என்னும் பெண் குழந்தை இருந்தது.
நேற்றிரவு (ஜூன் 6) வைதேகி தானும் விஷம் அருந்தியும் யாஷிகாவுக்கும் விஷம் கொடுத்தாக தெரிகிறது. விஷம் அருந்திய சில நிமிடத்தில் வைதேகியும் யாஷிகாவும் வாந்தி எடுத்துள்ளனர். இதைப்பார்த்த மணிகண்டன் இருவரையும் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக கேளம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு இருவருக்கும் முதலுதவி அளித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக யாஷிகாவை செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கும் வைதேகியை சென்னை அரசுமருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். குடும்ப தகராறு காரணமாக வைதேகி தற்கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிகண்டனும் வைதேகியும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆனதையடுத்து ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.