செங்கல்பட்டு: திருப்போரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட செம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வந்தன.
மொத்தம் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் வீடுகள் கட்டுதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
பழங்குடியின மக்களுக்கு வீடுகள் வழங்கிய அமைச்சர்
இந்நிலையில் இன்று (ஜூலை 31) ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், பழங்குடியினர் 51 பேருக்கு பசுமை வீடுகளை வழங்கினார். மேலும் பழங்குடியின மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நில அளவையர் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வழக்கு ரத்து