செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவாரூரைச் சேர்ந்த கவிப்பிரியா என்ற மாணவி, இந்த சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த 28ம் தேதி மாலை, தான் தங்கியிருந்த விடுதியிலேயே, கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். சக மாணவிகளால் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிப்பிரியா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த (ஏப்30) ஆம் தேதி உயிரிழந்தார்.
மாணவியின் இறப்பு குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவிப்பிரியாவின் பெற்றோர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கவிப்பிரியாவின் மரணம் குறித்து விசாரிக்க, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி சங்கரை விசாரணை அதிகாரியாக, சட்டக் கல்லூரி இயக்குநர் அலுவலகம் நியமித்துள்ளது.
இதையும் படிங்க:மாணவி தற்கொலை முயற்சி - கல்லூரி முதல்வரின் இழிவுச் செயலே காரணம்