செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழியில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கருங்குழி ஏரி 99 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரி தமிழ்நாடு அரசின் குடிமராமத்து பணி மூலமாக ரூ. 36.20 லட்சம் மதிப்பில் ஏரிக்கரை சீரமைத்தல், பாசன மதகு புதிதாக கட்டுதல், கலிங்கல் மதகு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடைபெற்றுவரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று (ஆகஸ்ட் 19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் லட்சுமி பிரியா, மாவட்ட செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் நீள்முடின், இளநிலை பொறியாளர் குமார் விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.