79ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம், சூனாம்பேடு, கொளத்தூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 21 கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கடற்கரையோரம் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட கோயில்களில் உற்சவரான விநாயகர், முருகர், ஸ்ரீ வேணுகோபால சுவாமி, திரௌபதி, பராசக்தி, அங்காளம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட உற்சவர்களுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்பு உற்சவ கடவுள்கள் அனைவரும் கோயிலை வலம்வந்து, கடற்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டு மக்களுக்கு காட்சி அளித்தனர்.
இதையும் படிங்க: மக்கள் வெள்ளத்தில் மிதந்த மரகதாம்பிகை!