காஞ்சி, செங்கை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 909 ஏரிகள் உள்ளன. இதில் இன்றைய நிலவரப்படி, 564 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 236 ஏரிகள், 75 விழுக்காடு கொள்ளளவையும், 95 ஏரிகள், 50 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான தாமல் ஏரி, 18 அடி ஆழம் உடையது. இதில் தற்போது, 14.5 அடி நீர் நிரம்பியுள்ளது.
18 அடி ஆழமுடைய தென்னேரி, 17.6 அடி ஆழமுடைய ஸ்ரீபெரும்புதுார் ஏரி, 18.40 அடி ஆழம் கொண்ட மணிமங்கலம் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஏரி முழுக் கொள்ளளவைத் தாண்டியதால், உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரி, 14.50 அடி வரை நிரம்பியுள்ளது. 15 அடி ஆழமுடைய பொன்விளைந்தகளத்துார் ஏரி, 14.60 அடி வரை நிரம்பி வழிகிறது. 15 அடி ஆழமுடைய கொளவாய் ஏரி, ஏறத்தாழ நிரம்பிவிட்டது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில், பொதுப் பணித் துறையினரின் புள்ளிவிவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாயிரத்து 112 குளங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 512 குளங்களும் என மொத்தம் நான்காயிரத்து ஆயிரத்து 624 குளங்கள் உள்ளன.
இவற்றில், இரண்டாயிரத்து 78 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிரம்பியுள்ள நீர்நிலைகளால், கால்நடை, விவசாயத் தொழிலாளர்கள் மனநிறைவில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.2.5 லட்சம் கொள்ளை!