சென்னை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை கால பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாம்பன் கால்வாய் மற்றும் சிட்லபாக்கம் ஏரி பராமரிப்பு பணிகளை குறித்து ஆய்வு செய்கையில், பணிகள் குறித்த தகவல்களை கேட்டு விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பணீந்திர ரெட்டி கூறுகையில், "தாம்பரம் வருவாய் கோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் 90 விழுக்காடு முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடைய இன்னும் 10% மட்டுமே உள்ளது. கனமழை காலத்தில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகள் போன்று தற்போது கனமழை பெய்தாலும் சிறிதளவான பாதிப்புகளே ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் விவகாரம்: விசிகவினர் ஆர்ப்பாட்டம்