ETV Bharat / state

செங்கல்பட்டு அருகே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைப்பு; காற்றில் பறந்த அரசு உத்தரவு! - ஒமைக்ரான்

ஒமைக்ரான் கரோனா பெருந்தொற்றின் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு விடுமுறை அளித்திருக்கும் நிலையில், மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து கட்டாயப்படுத்திய அரசு அலுவலர்களின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைப்பு; காற்றில் பறந்த அரசு உத்தரவு!

author img

By

Published : Jan 4, 2022, 9:02 AM IST

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறையளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மதுராந்தகத்தை அடுத்த முதுகரையில் இயங்கிவரும் அரசுப்பள்ளியில் "இல்லம் தேடி கல்வி" என்ற அரசு நிகழ்ச்சியை கல்வித்துறை அலுவலர்கள் நேற்று (ஜன.3) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்களை கல்வித்துறை அலுவலர்களால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாகியதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர் கீதா கார்த்திகேயன், கல்வித்துறை அலுவலர்களின் வேண்டுகோளை ஏற்றே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி செயல்பட்டு கரோனா தொற்று பரவ வழிவகுத்த அரசு அலுவலர்களின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: COVID 19 in TN: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,728 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.