சென்னை மணலியில் இருந்து பாண்டிச்சேரிக்கு 18 டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
பின்னர் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர். அப்படி மீட்கும்போது எரிவாயு அளவுகோல் குழாய் மீது சேதமடைந்து, எரிவாயு கசியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, விபத்து ஏற்படாமல் தடுத்தனர். இருப்பினும் எரிவாயு கசிவினை சரி செய்ய முடியாததால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்துமே மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர்.
இதையும் படிங்க: ஊராட்சி அலுவலகத்தில் அலுவலர் தூக்கிட்டு தற்கொலை!