ETV Bharat / state

வேடந்தாங்கல் வந்த வெளிநாட்டுப்பறவைகள் - புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகளின் வரத் தொடங்கியுள்ளதால், பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை!

author img

By

Published : Nov 9, 2022, 4:03 PM IST

Updated : Nov 9, 2022, 4:47 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்கள் தொடங்கி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் வரை, வெளிநாட்டுப்பறவைகள் இங்கு வந்து தங்கி இனவிருத்தி செய்து திரும்பும்.

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்டப் பல நாடுகளிலிருந்தும், பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து கடந்து வேடந்தாங்கலுக்கு வந்து இனவிருத்தி செய்து திரும்புகின்றன.

அதிகபட்சமாக இருபதாயிரம் பறவைகள் வரை இங்கு வந்து இனவிருத்தி செய்யும். கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டி வாயன், வர்ண நாரை, நத்தை கொத்தி, சாம்பல் நிற கொக்கு உள்ளிட்ட 26 வகையான பறவைகள் இங்கு வந்து தங்குவது வழக்கம்.

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப்பறவைகள் வருகை!

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளும் வரத்தொடங்கியுள்ளன. பறவைகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதயும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் வெள்ள அபாயம் - முதல் கட்ட எச்சரிக்கை!

Last Updated : Nov 9, 2022, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.