ETV Bharat / state

கோவிட்-19 பரவலால் மதுராந்தகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்! - கோவிட்-19 பரவலால் மதுராந்தகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்

செங்கல்பட்டு : மதுராந்தகத்தில் ஐந்து பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் மேலும் ஐவருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : May 6, 2020, 2:14 PM IST

சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் வேலை பார்த்து வந்த பலருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்தை முழுமையாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில் தமது சொந்த ஊர்களுக்கு சென்ற லாரி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் பலருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோயம்பேட்டில் இருந்து தமது ஊர்களுக்கு திரும்பியுள்ளவர்கள், காய்கனி சந்தையோடு வியாபாரத் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முதல் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நேற்றைய பரிசோதனையில், கோயம்பேடு சந்தையில் இருந்து நாள்தோறும் பழங்களை வாங்கிவந்து வந்து வியாபாரம் செய்துவந்த செங்குந்தர் பேட்டை பகுதியைச் சேர்ந்த சாரதா என்பவருக்கு கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சித்தாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாடு கிராமத்திலிருந்து பலர் கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐவருக்கு கரோனா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மதுராந்தகத்தில் மேலும் ஐவருக்கு கரோனா தொற்று உறுதி
மதுராந்தகத்தில் மேலும் ஐவருக்கு கரோனா தொற்று உறுதி

கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் மேலும் சிலர் மருத்துவமனை சிகிச்சைக்கு பயந்து தலைமறைவாக இருப்பதாக அறிய முடிகிறது. தலைமறைவாகி இருப்போரை தேடிக் கண்டுபிடித்து மருத்துவப் பரிசோதனை செய்ய சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த தொண்டாடு கிராமம் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 5 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.