சென்னை: சாலையில் வாகனங்களில் செல்வோருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படும். இத்தகைய பாதிப்புகள் அரிதாகக் காணப்பட்டாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளோ ஈடு செய்ய முடியாதது. இதனைத் தவிர்ப்பதற்காகவே டிஃபிபிரிலேட்டர் (AED/Defibrillator Fast Response Kit) என்ற சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயணத்தின்போது, கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு ஏற்ற வகையில், தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனம் எதிர்பாராத நேரம் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் வாகன ஓட்டி மயக்க நிலைக்குச் சென்றுவிடுவர். இதைக் கண்ட பலரும் பயத்தில் அவர்களின் அருகில் செல்ல தயங்குவதும், ஆம்புலன்சிற்காக காத்திருப்பதும் என நேரம் கடத்துவதைத் தவிர்த்துவிட்டு, இந்த சாதனத்திலுள்ளவற்றின் மூலம் மருத்துவமனைகளில் நோயாளிக்கு (Shock Treatment) அதிர்ச்சி வைத்தியம் செய்யலாம்.
அதற்கு முன், அவரது இதயத்துடிப்பு உள்ளதா? எனப் பார்ப்பது அவசியம். தொடர்ந்து, அதிலுள்ள எலக்ட்ரிக் பெடல் கிட்டை (Kit) எடுத்து மயக்கத்திலுள்ளவரின் மார்பு பகுதியில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, (CPR first aid) இதயம் நுரையீரல் செயல் தூண்டல் செய்யவேண்டும். பின், அந்த சாதனத்திலுள்ள பொத்தானை போதிய அளவோடு அழுத்தி அதிர்ச்சி வைத்தியம் தரலாம். அப்போது, மயக்கத்திலுள்ள வரை கட்டாயம் தொடாமல் இருப்பது நல்லது. இதைத்தொடர்ந்து, மாரடைப்பில் உள்ளவரின் உயிரைக் காக்கலாம். இந்த சாதனத்தின் விலை சுமார் ரூ.60,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சாதனத்தைத் தாம்பரம் மாநகர காவல்துறையினர், தனியார் நிறுவனத்துடன் இணைந்து சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், மாரடைப்பினால் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகில் திறந்து வைத்துள்ளனர். குறிப்பாக, இந்த தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் கருவியை அறிமுகம் செய்வது இதுவே முதன்முறையாகும்.
டிஃபிபிரிலேட்டர் - செம்மஞ்சேரியில் அறிமுகம்: பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் தாம்பரம் மாநகர காவல்துறையும் தனியார் தொண்டு நிறுவனங்களும் இணைந்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைக்கப் போராடுபவர்களைக் காப்பாற்றும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகத் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் எனும் கருவி சோழிங்கநல்லூர் சிக்னல் செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் சாலை விபத்துகளிலோ (அ) மாரடைப்பாலே மூச்சு விட அவதிப்படுவோருக்கு முதல் உதவி செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த கருவி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறையாகும்.
உயிரைக் காப்பாற்றலாம்: விதத்தில் பாதிக்கப்பட நபருக்கு உயிர் பிழைக்க 30 % தான் வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், இக்கருவி மூலம் சிகிச்சை அளித்தால் 80 % வரை உயிர்ப் பிழைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த கருவி வெளிநாடுகளில் 15 கிலோமீட்டருக்கு ஒன்று இருக்கும். மேலும், இந்த கருவி அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லா பகுதிகளிலும் விரைவில்: அடுத்தடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் காவல்துறையிடம் இணைந்து இந்த கருவியை அமைப்பதற்கான பணியில் ஈடுபட போவதாக தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்காதோருக்கு எமன் வேடத்தில் வேஷமிட்ட நபரால் சோழிங்கநல்லூர் சாலையில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் காமினி மற்றும் இணை ஆணையர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: TN Assembly: சோலார் மையமாகும் தமிழ்நாடு மாவட்டங்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!