செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "குடும்ப அட்டை வேண்டி தகுதியுள்ளவர்கள் யார் விண்ணப்பத்தினாலும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் 1,362 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனை விரைந்து பரீசிலீக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,700 மின்னணு குடும்ப அட்டைகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் 192 கடைகள் 3,000 குடும்ப அட்டைத்தாரர்களை கொண்ட கடைகள் உள்ளன. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து வழங்கும்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 8,000 ஆயிரம் நியாய விலைக் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அதற்கு சுமார் ரூ. 18 கோடி வாடகை செலுத்தப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 நியாய கடைகளை ஆய்வு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது 8 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: வனப்பகுதியில் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் மா.சு