செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாது விபத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயளிகளை கவனிக்க குறைந்தது 1,500 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது உள்ள 135 செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றிவருகின்றனர். இந்த பணிசுமை காரணமாக செவிலியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதனை அரசு கருத்தில் கொண்டு 500 முதல் 1000 செவிலியர்களை உடனே பணிநியமனம் செய்யவேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவமனை செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளனர். மேலும், ஏப்ரல் 26ஆம் தேதி கண்டன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.