ETV Bharat / state

ஊரடங்கினால் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம் - விவசாயிகள் வேதனை - வாழை விவசாயம் பாதிப்பு

செங்கல்பட்டு: ஆத்தூர், திம்மாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகளை ஊரடங்கினால் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு வாழை விவசாயம் பாதிப்பு  வாழை விவசாயம் பாதிப்பு  chengalpattu district ness  ஊரடங்கினால் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை
ஊரடங்கினால் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை
author img

By

Published : Apr 27, 2020, 4:33 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர், திம்மாவரம், ரெட்டிபாளையம், பாலூர், மேலச்சேரி, வடபாதி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்படுகின்றது. பாலாறு ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு பலவகை வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

இந்த விவசாயத்தை நம்பி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் உள்ளன. தற்போது, சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், ஊரடங்கினால், கூலிக்கு ஆள் கிடைக்காததாலும், வியாபாரிகள் வாழைகளை வெட்ட வராததாலும் வாழைத்தார்கள் கொலையிலே பழுத்து நாசமாகி வருகின்றன.

ஊரடங்கினால் பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை

வாழைத்தார் மட்டுமின்றி வாழை இலை, வாழைத் தணடு உள்ளிட்ட எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வாழை விவசாயி உமாபதி கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக வாழை விவசாயம் இருக்கிறது. இங்கு விளையக்கூடிய வாழைத்தார்கள், இலை, வாழைத்தண்டு போன்றவை காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போதைய ஊரடங்கினால், வாழைத்தார்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் 2 ஆயிரம் ரூபாயை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை. வீட்டிலுள்ள நகைகளை அடகுவைத்து வாழை விசாயம் செய்துள்ளோம்.

எனவே, தமிழ்நாடு அரசு நாங்கள் விளைவித்த வாழைத்தார்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும், கூடுதல் நிவாரணமும் வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'கரோனா போலீஸ பாத்திருப்பீங்க... கரோனா ஆட்டோவ பாத்திருங்கிங்ளா'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.