தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டும் ஒன்று. இம்மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மதுராந்தகம் பகுதியில் கரோனா நோய் தொற்று அதிகமாக உள்ளதாகவும், இதுவரை ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே மதுராந்தகம் நகர் முழுவதும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. வெளியாள்கள் உள்ளே செல்லாமலும் நகரின் உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லாமலும் இருக்கும் வகையில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை துணைத் தலைவர் தேன்மொழி, நகர் முழுவதும் ஆய்வுசெய்து வெளிநபர் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் அனுமதி இல்லாமல் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தாமதமாகும் நெல் கொள்முதல்: விவசாயிகள் கோரிக்கை