ETV Bharat / state

கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு - Chengalpattu Collector

செங்கல்பட்டு: கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் குறித்து பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கீரபக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம்
கீரபக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம்
author img

By

Published : Jun 12, 2021, 2:17 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், பல மாதங்களாக குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

மேலும், அடிக்கடி மோட்டார் பழுதாவதால் பல பகுதிகளில் சரிவர குடிநீர் விநியோகம் செய்வதில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்றும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தொட்டி மாரியம்மன் கோயில் தெரு என்ற பகுதியில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அங்குள்ள சுவிட்ச் போட்டபோது, அப்பகுதியை சேர்ந்த அலமேலு என்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அப்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இதுவரை பொருத்தப்படவில்லை. இதில் சின்டெக்ஸ் தொட்டி இடமாற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மையம் அருகில் ஆரம்பிக்கப்பட்ட பணி கடந்த எட்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி

இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றனர். மேலும், அதே பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பாக்ஸ் மற்றும் திறந்தவெளியில் கழட்டி விடப்பட்டுள்ள போர் மூலம் எர்த் வருவதால் பொதுமக்கள் உயிர் பயத்தில் அச்சத்துடன் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இதேபோல் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் குறித்தும் பலமுறை புகார் கூறியும் ஊராட்சி செயலர் கண்டுக்கொள்ளவில்லை. மேலும், பல இடங்களில் ஆழ்துளை கிணறு, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டும் பல ஆண்டுகளாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சி செயலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்" என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.