ETV Bharat / state

கோயில் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்: தட்டிக்கேட்டவருக்கு அடி உதை

கூடுவாஞ்சேரி அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர், தன்னை தட்டிக்கேட்ட கோயில் நிர்வாகியை தனது நண்பர்களை வைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

chengalpattu news  chengalpatttu latest news  crime news  குற்றச் செய்திகள்  செங்கல்பட்டு செய்திகள்  திமுக உறுப்பினர்  கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக உறுப்பினர்  செங்கல்பட்டு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக உறுப்பினர்  சரமாரியாக அடி உதை  dmk member occupied a temple land and attacked the temple officer in chengalpattu
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக உறுப்பினர்-தட்டிக்கேட்டவருக்கு சரமாரியாக அடி உதை!!
author img

By

Published : Jun 12, 2021, 1:52 PM IST

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் அங்காளம்மன் கோயிலும், அதற்குச் சொந்தமான இடமும் உள்ளது. இக்கோயிலை கண்ணன் என்பவர் நிர்வாகம் செய்துவந்துள்ளார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள நிலத்தில் திமுக உறுப்பினரான சுந்தர் என்பவர் நீண்ட ஆண்டுகளாக வசித்துவந்துள்ளார்.

நீண்ட காலமாக கண்ணனுக்கும், சுந்தருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாகவும், கோயில் நிலத்தை சுந்தர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளதால், கண்ணன் சுந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர் சுந்தர் தனது நண்பர்கள் மூன்று பேரை வரவழைத்து கண்ணனைச் சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த கண்ணன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர், திமுக உறுப்பினர் சுந்தரை கைதுசெய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னதாகவே திமுக உறுப்பினர் சுந்தர் மீது கொலை, கொள்ளை என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுகவினரின் சுவரொட்டி சண்டை: 3 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.