ETV Bharat / state

செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களில் டிஜிபி திடீர் ஆய்வு - police stations

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களில் டிஜிபி திடீர் ஆய்வு

author img

By

Published : Oct 5, 2022, 4:22 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை, டிஜிபி சைலேந்திரபாபு, இன்று (அக்.5) ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா ஆகியோர் உடன் இருந்தனர். அதனையடுத்து, படாளம், மதுராந்தகம் ஆகிய காவல் நிலையங்களிலும் டிஜிபி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வழக்குகளின் நிலவரம், சாலை விபத்துகளைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையங்களில் டிஜிபி திடீர் ஆய்வு

இதையும் படிங்க: சிதம்பரத்தில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்; மணமுடித்த தீட்சிதருக்கு வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.