ETV Bharat / state

வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை தொடக்கம் - corona

செங்கல்பட்டு: திங்கள் கிழமை முதல் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை தொடங்கப்படுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அச்ட்ஃப்
dஅச்
author img

By

Published : Apr 10, 2021, 6:42 AM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ மார்ச் 16ஆம் தேதியிலிருந்து நோய்த் தொற்றானது வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது 90 காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் இருக்கின்றார்கள். சராசரியாக ஒரு காய்ச்சல் முகாமில் 100 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறோம்.

2200 என்ற அளவிற்கு இருந்த பரிசோதனை செய்யும் அளவு உயர்த்தப்பட்டு நேற்று ஒரே நாளில் 77600 பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் உள்ள 5530 தெருக்களில் 474 கரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். பேரூராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 167 தெருக்களில் 414 கரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

ஒரே வீட்டில் 3 நபர்கள் பாதிக்கப்பட்டால் அந்த வீட்டினை தொடர் கண்காணிப்பில் வைக்கிறோம். அதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 63 வீடுகள் கண்காணிப்பில் இருக்கின்றன. மாவட்டம் முழுவதும் 147 தடுப்பூசி போடுவதற்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,30,373 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 10 ஆயிரத்து 340 நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி போட்டு உள்ளனர் .

தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் திங்கள் கிழமை முதல் நகராட்சி பகுதியில் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கவுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.