ETV Bharat / state

108 ஆம்புலன்ஸ்களுக்கு தணிக்கை - சுகாதாரத்துறை செயலர்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்று தணிக்கை செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

complete fc checking for 108 ambulances said health secretary radhakrishnan

author img

By

Published : Sep 6, 2020, 7:22 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா தொற்று பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி, எக்ஸ்ரே எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது வாகனத்தில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் வாயு கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு,தென்காசி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இயங்கும் 108 ஆம்புலன்ஸில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.