செங்கல்பட்டு:மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பாக, தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுப் போட்டி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரிலுள்ள உள்ள தனியார் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவி அனுஸ்ரீ முதல் பரிசு பெற்றார். அவருக்கு தங்கப்பதக்கமும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி அனுஸ்ரீ, அகில இந்திய அளவில் திறன் மேம்பாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றதைப் பாராட்டும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி அனுஸ்ரீக்கு, தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: Love Story: கடல் கடந்த காதல்... உசிலம்பட்டி மருமகளான இங்கிலாந்துப் பெண்!