ETV Bharat / state

விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆடும் செய்யூர் அனல்மின் நிலைய திட்டம்...! - cheyyur ultra mega thermal plant affects farmers and birds

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில், கடந்த 2014ஆம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மாபெரும் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, பல ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

விவசாயி...விவசாயி
விவசாயி...விவசாயி
author img

By

Published : Jan 3, 2021, 1:27 PM IST

Updated : Jan 6, 2021, 1:59 PM IST

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்யூர் பகுதியில் அனல்மின் நிலையம் கட்டுவதும், அதற்கான கரி உற்பத்தி செய்வதும் அப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என நெடுங்காலமாக அப்பகுதி மக்களும், சூழலியலாளர்களும் போராடி வருகின்றனர்.

செய்யூர் தாலுக்கா

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்த அச்சிறுப்பாக்கம், 2011ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதியாக மறு அவதாரம் எடுத்தது. அதுவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின், மிகவும் பின்தங்கிய பிரபலமில்லாத ஊராக இருந்த செய்யூர், சட்டப்பேரவைத் தொகுதியாக உருமாற்றம் அடைந்தபின் பலருக்கும் அறிமுகமானது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் தனித் தொகுதியாக உள்ளது.

சட்டப்பேரவைத் தொகுதியாக மாறினாலும், மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதியாகத்தான் இன்றளவும் காணப்படுகிறது. இங்கிருக்கும் மக்களின் பிரதான தொழில், விவசாயம் தான். இந்நிலையில் அனல் மின் நிலையம் அமைந்தால் தங்களது விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

சூழலியல் முக்கியத்துவம்

பல்லுயிர்ச் சூழல் பெருகுவதற்குப் பேருதவி புரிபவை, பறவைகள். இவை வலசை (Migration) செல்லக்கூடிய இடங்களைத் தெரிந்துகொண்டு அது சீர்கெடாமல் பராமரித்தால்தான் பல்லுயிர்த்தன்மையில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. 2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பறவைகள் அதிகம் வாழும் பகுதியில் செய்யூரும் இடம்பெற்றுள்ளது. இங்கு அனல்மின் நிலையம் வருவதால் செய்யூர் முழுவதும் உள்ள பல்லுயிர்ச் சூழல் பாதிக்கப்படலாம், அழிவின் விளிம்பைக் கூட சந்திக்க நேரிடும்.

வாழ்வாதாரம்

செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதியில் செய்யூர், விளாம்பூர், பனையூர் என்ற மூன்று கிராமங்கள் அடங்கும். விளைநிலங்கள் நிறைந்தது விளாம்பூர் பகுதி என்றால் செய்யூர், பனையூர் இரண்டுமே மீனவப் பகுதிகள்.

அனல்மின் நிலையம் அமையவுள்ள பகுதியான செய்யூரில் மீன்பிடித் தொழிலும், விவசாயமும் தான் பிரதானத் தொழில். இப்பகுதியில் முன்னர் ஓகோவென்றிருந்த உப்பளத் தொழில் தற்போது, காற்றில் கரைந்த கற்பூரமாய்க் கானல் நீராகிவிட்டது. ஒருவேளை அனல் மின்நிலைய திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயமும், அதை நம்பியிருக்கும் விவசாயிகளின் நிலையும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.

துரிதமான அனல் மின்நிலைய பணிகள்

2011ஆம் ஆண்டு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு அனல் மின் நிலைய திட்டத்தின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தண்ணீர் பந்தல், பாலுார் தொடங்கி வெடால் வரை, அனல்மின் நிலையத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. இதற்காக பல ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முயன்றபோது, பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். சிலர் அரசுக்கு இசைந்து கொடுத்தனர்.

அனல்மின் நிலையம் அமைந்தால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என பசுமைத் தீர்ப்பாயத்தில் சிலர் முறையிட்டனர். இதனிடையே அனல் மின் நிலையப் பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு, என்.டி.பி.சி எனப்படும் தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. ஆனால், கட்டுமானம் முடித்து, சில காலத்திற்குப் பிறகு மின் நிலையத்தை அரசுக்குக் கையளிப்பது போன்றவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டெண்டரிலிருந்து விலகுவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்தன.

விளைநிலங்களில் மேயும் கால்நடைகள்
விளைநிலங்களில் மேயும் கால்நடைகள்

விளைநிலங்களைக் கையகப்படுத்தி, அனல் மின் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகளும், சூழலியல் பாதிப்புக்கு எதிராக சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு நிலம் கையகப்படுத்தலைத் தீவிரப்படுத்தியதோடு, விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களை எடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன. அப்படி எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு, ஆறரை லட்சம் ரூபாய் என்ற குறைந்தபட்ச இழப்பீடு வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு எதிராக வழக்கு

ஒரு சென்ட் நிலத்திற்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டில் வழங்கப்பட்ட இழப்பீடு மிக மிகக்குறைவு என வெடால் பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அனல்மின் நிலையம் வந்தால், செய்யூர் தொகுதியின் வாழ்க்கைத் தரம் உயரும் எனச் சிலரும், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதரம் முற்றிலும் அழிக்கப்படும் எனச் சிலரும் வாதிட, பசுமைத் தீர்ப்பாயத்தின் கெடுபிடிக்கு நடுவில் அனல்மின் நிலையத் திட்டம் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டது. கையகப்படுத்த நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் என அனைத்தும் தரிசாகக் கிடக்கின்றன.

கள நிலவரம்

பிழைப்பிற்கு வேறு வழியில்லாத விவசாயிகள் இழப்பீடு வழங்கப்பட்ட தங்களது நிலங்களை மீண்டும் உழுது விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால் இது நிரந்தரமல்ல என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை பயிரிடும் போதும் அனல் மின்நிலையத்தின் பணிகள் தொடங்கினால் தங்கள் பயிரை கொத்தும் குலையுமாக அழித்துவிடுவார்களே என்ற பயம்தான் அது. இந்த எண்ணவோட்டம் விவசாயிகள் மனதிற்குள் குழப்பத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்திவருகிறது.

அப்பகுதியில் வீடு கட்டினால், அவையும் ஒரு கட்டத்தில் கையகப்படுத்தப்படுமோ என்ற ஐயத்தில் மக்கள் குடிசைகளில் காலம் தள்ளி வருகின்றனர். அனல் மின்நிலையத்தால் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அப்பட்டமான பொய்யால் தங்களை அரசு ஏமாற்றுவதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், அதில் தாங்கள் செய்யும் வேலையென்று எதுவும் இல்லையென குற்றஞ்சாட்டுகின்றனர்.

விவசாயி...விவசாயி
விவசாயி...விவசாயி

தீர்வு தான் என்ன?

ஒரு இடத்தைக் கையகப்படுத்தி அதில் தொழிற்சாலையை உருவாக்கும் முன்னர் Form 1 என்ற படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பகுதி பிரச்னைக்குரியதா? அது விவசாய நிலமா? தொடங்கவிருக்கும் பகுதிக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பறவை வாழிடப் பகுதிகள், பல்லுயிர்ப் பகுதிகள் ஏதேனும் உள்ளனவா? போன்ற கேள்விகள் படிவத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப் படிவத்தில் விவசாய நிலம், பறவைகள் வாழிடம், பல்லுயிர்ப்பகுதி என அனைத்துமே செய்யூருக்குப் பொருந்திப் போகும்போது, அங்கு அனல் மின்நிலையம் அமைக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆடும் செய்யூர் அனல்மின் நிலைய திட்டம்...!

இந்த அனுமதியால்தான் செய்யூர் விவசாயிகள் வேறு வாழ்வாதாரமின்றி இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் செய்யூர்வாசிகளின் நலன் கருதி அனல் மின்நிலையம் அமையுமா? இல்லையா என்ற கேள்விக்கு அரசு விரைந்து விடையளிக்க வேண்டும்.

அப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை வளம், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம், வேறொரு இடத்தில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 6, 2021, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.