செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று (மே.4) ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் இன்று (மே.5) மருத்துவமனைக்கு வெளியே மருத்துவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.
அப்போது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் முறையாக தங்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!