செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஆமூர் கிராமம் அம்பேத்கர் 1 ஆவது தெருவை சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி ரவி. இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மகளும்,விஜய், அஜித் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மூன்று பிள்ளைகள்.இதில் வைத்தீஸ்வரி, விஜய் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் அஜித் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்,
நேற்று வெளியில் சென்ற அஜித் இரவு கடந்தும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 16) காலை ஆமூர் பெரிய ஏரிக்கரை வழியாக சென்றவர்கள் இரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததையடுத்து இதுகுறித்து மானாமதி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்,
இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர் உடலை மீட்டு விசாரணை செய்ததில் உயிரிழந்தது அஜித் என்பது தெரியவந்தது. மேலும், ஆமூர் ஏரிக்கரையில் உள்ள முள் புதரில் அஜித்தை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த உடலை மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன் நேரில் சென்று விசாரணை செய்து அவர் பயன்படுத்திய அலைபேசி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார்.
பின்னர், அஜித் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!
கல்லால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர் - போலீசார் தீவிர விசாரணை!
செங்கல்பட்டு : ஆமூர் அருகே இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.