ETV Bharat / state

தரைமட்டமான தரைப்பாலத்தால் கரும்பு விவசாயிகள் அவதி - கரும்பு விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: படாளம் அருகே பழமையான தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், கரும்பு ஆலைக்கு, 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Chengalpattu sugarcane farmers demand restoration of the damaged bridge

author img

By

Published : Dec 26, 2020, 2:08 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புகளை, விவசாயிகள் அரவைக்குக் கொண்டுவருகின்றனர். இப்பகுதியில், உதயம்பாக்கத்தை படாளத்தோடு இணைக்கும் பழைமையான தரைப்பாலம் ஒன்று இருந்துவந்தது.

இந்தப் பாலத்தின் வழியே, உதயம்பாக்கம், ஈசூர், வல்லிபுரம், திருக்கழுக்குன்றம், பொன்விளைந்த களத்துார், ஒட்டிவாக்கம் உள்ளிட்ட 20 கிராமத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைக்கு, கரும்புகளை ஏற்றிச் செல்வது வழக்கம். இந்தப் பாலம் 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது.

"உதயம்பாக்கத்திலிருந்து, படாளத்திற்கு இந்தத் தரைப்பாலத்தின் வழியே சென்றால், வெறும் 3 கிலோ மீட்டர்தான். ஆனால், தற்போது தரைப்பாலம் இல்லாததால், செங்கல்பட்டு வழியாக ஏறத்தாழ, 20 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு கரும்புகளை அரவைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம்.

தரைப்பாலத்தால் கரும்பு விவசாயிகள் அவதி

இதனால், தேவையற்ற நேர விரயத்தோடு, வாகனங்களுக்கான வாடகையும் அதிக அளவில் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் தேவையற்ற செலவுகளால் கரும்பு பயிரிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்" எனக் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் பலமுறை கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த அவர்கள், இந்தத் தரைப்பாலத்தை உயர்த்தி மீண்டும் கட்டித்தரவும், இந்தப் பகுதியில் தடுப்பணை கட்டி நீரைத் தேக்கவும் அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி உதவித் தொகையாக வழங்கிய சி.சி.இ.ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.