செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாணவன் யுவராஜ் என்பவர் நேற்று (அக்.29) பள்ளி செல்வதற்காக அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து மேலக்கோட்டையூர் அருகே சென்றபோது, யுவராஜ் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது பேருந்தின் பின்பக்க டயர் யுவராஜ் மீது ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே யுவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாழம்பூர் போலீசார், சம்பவயிடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூராவுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படியில் பயணிக்காதீங்க: பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் எந்த பேருந்துகளிலும் படியில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் கோவை கார் விபத்து... போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்...