செங்கல்பட்டு: மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஏ.ஆர். ராகுல் நாத் நேற்று (ஜூன் 16) பதவியேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்டு முதல் மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ் பதவியேற்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப் பின்பு இரண்டாவது மாவட்ட ஆட்சியராக ஏ.ஆர். ராகுல்நாத் இன்று பதவியேற்றார். மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் பிரியா உடன் இருந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.