ETV Bharat / state

"தொழில் துறையில் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியது" - அமைச்சர் தா.மோ அன்பரசன்! - latest news

Minister Anbarasan: செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன், இந்திய அளவில், தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் தா.மோ அன்பரசன்
அமைச்சர் தா.மோ அன்பரசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 5:20 PM IST

அமைச்சர் தா.மோ அன்பரசன்

செங்கல்பட்டு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு நடைபெற்றது. இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் முன்னிலையில் ரூபாய் 2 ஆயிரத்து 590 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியதாவது, “வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது MSME துறை (Ministry of Micro, Small and Medium Enterprises) ஆகும். உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்திடவும், 2030ல் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிற்கு 3 ஆம் இடம்: முதலமைச்சர், தொழில் துறையில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார். முதலமைச்சரின் அயராத உழைப்பினாலும், சீரிய திட்டங்களாலும், இந்திய அளவில், தொழில் துறையில் 14 ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

முதலீடுகளை ஈர்க்க இலக்கு: தொழில் துறையில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வர நடத்தப்பட உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறைக்கும், MSME துறைக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க, இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு MSME தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ரூபாய் 2,500 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் அதிகமாக 163 MSME தொழில் நிறுவனங்கள் மூலம் ரூபாய் 2 ஆயிரத்து 590 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்திலேயே, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்தும் தொழில்கள், தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட உள்ளன.

இதன் மூலம் 9 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெறுவதற்கு Single widow 2.O மூலம் அரசு துறைகள் வழங்கும் 163 வகையான சேவைகளை இணைய வழியிலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் இதுவரை 26 ஆயிரத்து 480 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24 ஆயிரத்து 117 பேருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்மனைகள் ஒதுக்கீடு: இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், இத்திட்டத்தின் மூலம் அனுமதிகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஏதுவாக, ஆலத்தூரில் 67.96 ஏக்கரிலும், கொடூரில் 99.13 ஏக்கரிலும் சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டு தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கம்: முதலமைச்சர் MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுவரை 1,099 கோடியே 86 லட்சம் ரூபாய் மானியத்துடன் 3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

126 கோடியே 84 லட்ச ரூபாய் மானியத்துடன் ரூபாய் 256 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, ஆயிரத்து 65 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 18 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்துடன் 77 கோடியே 78 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 534 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதில் 263 பேர் பெண்கள், 127 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும், பழங்குடியினர் 22 பேர் சிறுபான்மையினர், 7 மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.

கடன் உத்தரவாத திட்டம்: தமிழகத்தின் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்து பிணையில்லா கடன் பெற, ‘தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 25 ஆயிரத்து 348 தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 477 கோடி 72 லட்சம் வங்கி கடன் உதவிக்கு, ரூபாய் 410 கோடியே 78 லட்சம் கடன் உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது.

MSME நிறுவனங்கள் தங்கள் விலை பட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற, தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் (Tamil Nadu TReDS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், MSME நிறுவனங்களின் 6,900 விலைப்பட்டியல்களுக்கு, ரூபாய் ஆயிரத்து 289 கோடியே 22 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

வசதியாக்க மன்றங்கள்: மேலும் பேசிய அவர், “MSME நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உரிய தொகையை பெறுவதில் ஏற்படும் காலதாமத்திற்கு தீர்வு காணும் வகையில், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் ‘வசதியாக்க மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மன்றங்கள் மூலம் 542 நிறுவனங்களுக்கு ரூபாய் 95 கோடி 62 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25% ஆக உள்ளதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் கரூர், திருப்பூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

MSME தொழில்களின் வளர்ச்சிக்காக ரூபாய் 324 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில், 519 ஏக்கர் பரப்பளவில் 8 தொழிற்பேட்டைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. 325.64 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்மனைகளின் விலை உயர்ந்ததன் காரணமாக தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.

தொழில்மனை பட்டா: சிட்கோ வரலாற்றிலேயே முதல் முறையாக தொழில்மனை விலையை முதலமைச்சர் 5% முதல் 75% வரை குறைத்து உத்தரவிட்டார். மேலும் 1,356 தொழில்மனைகள், தொழில் முனைவோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த மனைகளில் தற்போது தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நில வகைப்பாட்டில் உள்ள 60 சிட்கோ தொழிற்பேட்டைகளின் 3 ஆயிரத்து 702 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென தொழில்முனைவோர்களின் கோரிக்கையை, ஏற்ற முதலமைச்சர், முதல் கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில் உள்ள 1,547 ஏக்கருக்கு பட்டா வழங்க ஆணையிட்டார். அதன் படி கடந்த 28.3.2023 அன்று பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை 216 தொழில் முனைவோர்களுக்கு தொழில்மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

Start-Up -TN இயக்கம்: குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், கிண்டி, அம்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில், ரூபாய் 175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழிற்கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், அவற்றை வர்த்தக ரீதியாக தயாரிக்கவும், Start-Up -TN என்ற இயக்கத்தை துவக்கி, அதற்கான நிதியினை ஒதுக்கி செயல்படுத்தபட்டு வருகிறது.

முதலமைச்சரின் முன் மாதிரியான திட்டங்களால், இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 3-ஆம் நிலைக்கு முன்னேறி ‘‘லீடர்” தகுதியை பெற்றுள்ளது. Start-Up -TN மூலம் இதுவரை 153 - ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூபாய் 41 கோடியே 96 லட்சம், பங்குகளாக முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்: இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்திட தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ ஆகிய திட்டங்களின் கீழ் இதுவரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 266 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூபாய் 7 கோடியே 39 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும்: ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைவதற்காக, நடைபெறவுள்ள, உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், MSME துறை மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் வெண்ணிலா மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மாணவர்கள் வேலைக்குச் செல்கின்றனர்.. அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.