ETV Bharat / state

வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவு குறைப்பு - தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Vedanthangal sanctuary
Vedanthangal sanctuary
author img

By

Published : Jun 21, 2020, 5:12 AM IST

செங்கல்பட்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு நத்தை, குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன்,கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

இந்தப் பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருகிறார்கள். இச்சூழலில் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதற்குப் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில், வேடந்தாங்கலின் பரப்பைக் குறைப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ஸ்டாலின் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனுவில், ”வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவு 29.51 ஹெக்டேர். 1996இல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்தச் சரணாலயத்தின் பரப்பளவை ஐந்து கிலோமீட்டரில் இருந்து மூன்று கிலோமீட்டராகக் குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்திற்கு கடந்த மார்ச் 19ஆம் தேதி அனுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்காகச் சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது தவறான செயலாகும். இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும்.

இதனால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். ஏற்கனவே இதேபோன்று சண்டிகர் அருகேயுள்ள சுக்னா ஏரி, சரணாலயப் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு வீடு கட்டும் திட்டத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.