செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 60 வயதான இவர், விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வயல்வெளிக்கு சென்ற கன்னியப்பன் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கன்னியப்பன் காணாமல் போனதற்கு மறுதினம், ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு புதரில் தலையில் பலத்த காயங்களுடன் கன்னியப்பன் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் காவல்துறையினர், கொலை செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் 17 வயது சிறுவனை கைது செய்த மேல்மருவத்தூர் காவல்துறையினர், அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தன் பெற்றோரை கன்னியப்பன் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வந்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், கன்னியப்பனை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 15 வயது சிறுவன்