செங்கல்பட்டு: 2004ஆம் ஆண்டு தனியார் சர்க்கஸ் நிறுவனத்திலிருந்து ஜான் இமாலயன் கரடி ஒன்று மீட்கப்பட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டது.
அப்படிக் கொண்டுவரும்போதே, அந்தக் கரடிக்கு இரண்டு கண்களிலும் பார்வைக் குறைபாடு இருந்ததாக, உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. தற்போது, 24 வயதாகும் அந்த ஹிமாலயன் கரடிக்கு, கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயிரியல் பூங்கா நிர்வாகம் தொடர்ந்து அந்த ஜான் ஹிமாலயன் கடிக்கு சிகிச்சை அளித்துவந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கரடி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கரடியின் உடலை உடற்கூராய்வு செய்த பிறகே, அதன் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் உயிரியல் பூங்கா அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.