மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80ஆவது பிறந்தநாள் முன்னிட்டு, ஆன்மிக இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவ்விழாவில் மக்கள் நலப்பணிகளாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுவருவதாகவும், கிராமங்களில் 80 கழிவறைகள் கட்டித்தரப்படும் என்றும் ஆன்மிக இயக்கம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 108 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பங்காரு அடிகளாருக்கு சதாபிஷேகம் - பிரபலங்கள் பங்கேற்பு!