செங்கல்பட்டு: சென்னை புதுப்பேட்டையில் உள்ள பச்சையப்ப முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (44). ஆட்டோ ஓட்டுநரான இவரும், அவருடைய ஐஸ்வர்யா என்ற 5 வயது மகளும், பூஜா என்ற மூன்று வயது மகளும் ஜனவரி 15ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் காவலர்கள் ஞானவேலைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 19) செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் இரண்டு குழந்தைகள் உள்பட மூவருடைய உடல் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து அங்குச் சென்ற காவலர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஞானவேலும் அவரது இரண்டு மகள்களும்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொலையா, தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: குழந்தைகளைக் கட்டி அணைத்தவாறு தந்தை தற்கொலை