ETV Bharat / state

அரும்பாக்கத்தில் திருடப்பட்ட நகைகள் காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்

அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், 3 கிலோ நகைகள் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்
காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்
author img

By

Published : Aug 18, 2022, 3:17 PM IST

செங்கல்பட்டு: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷ் என்பவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் என்பவரின் மனைவிக்கு உறவினர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளையைப் பற்றி விசாரித்து வந்த தனிப்படையினர், இன்று தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து மூன்று கிலோவுக்கும் அதிகமான நகைகளைக் கைப்பற்றினர்.

கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷ், நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு இங்கு கொண்டு வந்து வைத்தாரா, இது குறிப்பிட்ட ஆய்வாளருக்குத் தெரியுமா என்ற அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கொள்ளை சம்பந்தப்பட்ட நகைகள், காவல் ஆய்வாளரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விவகாரம்.. தாய் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.