செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 137 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அதேபகுதியைச்சேர்ந்த மனோகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புக்குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றத்தவறிய அலுவலர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் நேற்று (ஆக.6) பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்போடு வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில், இடிக்க வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மதுரபாக்கம் திமுக நிர்வாகி வேல்முருகன் என்பவரும் அப்பகுதி மக்களோடு சேர்ந்துகொண்டு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் போலீசார், மதுரபாக்கம் திமுக நிர்வாகிகள் வேல் முருகன், புருஷோத்தமன் ஆகியோர் உட்பட பொதுமக்களை போலீசார், குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சிலர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்துக்கொண்டு, கதறி அழுத காட்சியும் பரிதாபமாக இருந்தது.
இதையும் படிங்க: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது