செங்கல்பட்டு மாவட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிபவர் சிவ கலைச்செல்வன். இவரது வீடு மேல்மருவத்தூர் அருகேயுள்ள சோத்துபாக்கத்தில் உள்ளது. இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, லத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த போது, 100 நாள் வேலைத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில், இன்று (பிப். 02) காலை முதல், பிற்பகல் வரை மேல்மருவத்தூர் சோத்துபாக்கத்தில் உள்ள சிவ கலைச்செல்வன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறுகையில்,"இது ஒரு வழக்கமான நடைமுறைதான். சில ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரூரில் லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது!