ETV Bharat / state

தங்கம் என நினைத்து கவரிங் தாலியை பறித்த மர்ம நபர் - தாம்பரம்

தாம்பரம் அருகே தங்கம் என்று நினைத்து கவரிங் தாலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரால் கவரிங் நகை கழுத்தை கிழித்து பெண் மருத்துவமனையில் அனுமதி.

தங்கம் என நினைத்து கவரிங் தாலியை பறித்த மர்ம  நபரால் கவரிங் நகை கழுத்தை கிழித்து பெண் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jul 8, 2022, 3:30 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்தவர் சசி (37). தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று (ஜூலை 07) மாலை வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு தனது தோழியுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சசி அணிந்திருந்த கவரிங் தாலியை தங்கம் என்று நினைத்து பறித்துள்ளார். இதில் சசி சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதால் கவரிங் தாலி அவரின் கழுத்தை அறுத்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழி உடனடியாக காயமடைந்த சசியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் விநாயகர் சிலை உடைப்பு: இந்து முன்னணி போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.