ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர் கைது!! - A Man Attempt To Suicide In Grievance Day in Chengalpattu Collector Office

செங்கல்பட்டு: போலி பட்டா வழங்கியது தொடர்பாக அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறை தீர்ப்பு நாள்  செங்கல்பட்டு மக்கள் குறை தீர்ப்பு நாள்  செங்கல்பட்டில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி  தீக்குளிக்க முயற்சி  Trying to set fire to someone in the Chengalpattu  People Grievance Day  People Grievance Day in Chengalpattu  Try to put out the fire  A Man Attempt To Suicide In Chengalpattu  A Man Attempt To Suicide In Grievance Day in Chengalpattu Collector Office  Grievance Day in Chengalpattu Collector Office
A Man Attempt To Suicide In Grievance Day in Chengalpattu Collector Office
author img

By

Published : Feb 8, 2021, 5:01 PM IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று(பிப்.8) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (59) என்பவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட, காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், செய்யூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள கோயில் அனாதின ( யாருக்கும் உரிமையில்லா அரசு நிலம்) நிலத்தை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்திற்கு பட்டா வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முதியவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

தீக்குளிக்க முயன்ற வேல்முருகன் பேசியதாவது,"அரசு அலுவலகங்களில் வாய்மையே வெல்லும் என்று வெறும் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு சமூக விரோதிகளுக்கு போலிபட்டா வழங்கியுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்

இது தொடர்பாக புகார் அளித்தால் சம்பந்தபட்ட அலுவலர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், கையூட்டு பெறவே துடிக்கிறார்கள்" எனக் கூறினார். இதையடுத்து, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தீக்குளிக்க முயன்ற வேல்முருகனை கைது செய்யும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பணத்தை தர மறுக்கும் மளிகை கடைக்காரர்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.