செங்கல்பட்டு: புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்(82) மாரடைப்பால் இன்று (அக்.19) காலமானார். நெஞ்சு சளி காரணமாக சித்தர் பீடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், பெண்களை கோயில் கருவறைக்குள் சென்று வழிபட வைத்தது உள்ளிட்ட ஆன்மீக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை இவர் மேற்கொண்ட இவரை ஆதிபராசக்தி பக்தர்கள் 'அம்மா' எனப் பாசத்துடன் அழைத்து வந்தனர். இவரது சேவையை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2019-ல் பங்காரு அடிகளாருக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கி கௌரவித்தது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். என எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார்… pic.twitter.com/8GH3DrrtjR
">மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 19, 2023
ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார்… pic.twitter.com/8GH3DrrtjRமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 19, 2023
ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார்… pic.twitter.com/8GH3DrrtjR
ஓ.பன்னீர்செல்வம்: தனது சமூக வலைத்தளத்தில், "மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு 'அம்மா' என்றழைக்கப்பட்டவரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர், இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற…
— O Panneerselvam (@OfficeOfOPS) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற…
— O Panneerselvam (@OfficeOfOPS) October 19, 2023மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற…
— O Panneerselvam (@OfficeOfOPS) October 19, 2023
அண்ணாமலை: பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப்… pic.twitter.com/ZlBSPhEhV8
">மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப்… pic.twitter.com/ZlBSPhEhV8மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) October 19, 2023
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப்… pic.twitter.com/ZlBSPhEhV8
டிடிவி தினகரன்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட X பதிவில், 'கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடக ஜேடிஎஸ் தலைவராக குமாரசாமி நியமனம்! மாநிலத் தலைமையை கலைத்த தேவு கவுடா? என்ன காரணம்?