ETV Bharat / state

பாடி பில்டர் ரத்தினம், ஈடிவி பாரத்துக்கு நன்றி - undefined

ஆசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயதான ரத்தினம், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் ஊடகத்துக்கு நன்றி
ஈடிவி பாரத் ஊடகத்துக்கு நன்றி
author img

By

Published : Jun 5, 2022, 6:53 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். 72 வயதான நிலையில் மதுராந்தகம் பகுதியிலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ரத்தினம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து இந்த வயதிலும் கட்டுடலுடன் காணப்படுகிறார்.

பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ஆசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு 60 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மே மாதம் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கு கொண்டு தேர்ச்சிபெற்றுள்ளார்.

தொடர்ந்து, வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாலத்தீவில் நடைபெறும் 54ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் கலந்துகொள்கிறார். இது அப்பகுதியையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈடிவி பாரத் ஊடகத்துக்கு நன்றி

இதற்கிடையில், “தனக்கு ரோல்மாடலாக தற்போதைய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு திகழ்கிறார். உடல் ஆரோக்கியம் குறித்த சைலேந்திரபாபுவின் சமூகப் பதிவுகள் தன்னைப் பெரிதும் கவர்ந்தன. வாய்ப்பு கிடைத்தால் டிஜிபி-யை சந்தித்து வாழ்த்துபெறுவேன்’’ ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நமது 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' இணையதளம் விரிவான சிறப்புசெய்தித்தொகுப்பினை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் ரத்தினம் குறித்தான செய்தியை வெளியிட்டன.

இவ்வாறு செய்திகள் மூலம் இது பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று ரத்தினத்தை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன்னைப் பற்றி விரிவான செய்தி வெளியிட்ட இடிவி பாரத்திற்கு ரத்தினம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, செங்கல்பட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பரத், ரத்தினத்தைப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். மதுராந்தகம் பகுதிவாழ் மக்களும் மேள தாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாகமளித்தனர்.

இதையும் படிங்க: மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.