செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. முதுகரையிலிருந்து கூவத்துார் செல்லும் சாலையில், ஒதுக்குப்புறமான இடத்தில் இக்கடை உள்ளது. இதில், இரும்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார், சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார். தினந்தோறும், விற்பனை முடிந்தவுடன், இரவு 10 மணிக்கு மேல், விற்பனைத் தொகையை சுரேஷ்குமார் தனது வீட்டிற்கு எடுத்துச் செல்வதையும், மறுநாள் காலை வங்கியில் செலுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், நேற்றிரவு(ஜனவரி 17) விற்பனைத் தொகையுடன் சுரேஷ்குமார் வீட்டிற்குச் செல்கையில், அவரை பைக்கில் வந்து வழிமறித்தனர்.
இதனையடுத்து சுரேஷ்குமாரை தாக்கிவிட்டு, 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.