ETV Bharat / state

செம்மஞ்சேரியில் ரூ. 3.51 கோடி உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா - semmanjeri bridge

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செம்மஞ்சேரியில், மழைநீர் செல்லும் கால்வாய் மீது 3.51 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள உயர்மட்ட பாலத்திற்கான அடிக்கல்லை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பெரியகருப்பன் நாட்டினர்.

3-and-half-crore-rupees-worth-bridge-construction-started-in-semmancheri
செம்மஞ்சேரியில் ரூ. 3.51 கோடி உயர்மட்ட பாலம்
author img

By

Published : Aug 3, 2021, 5:59 AM IST

செங்கல்பட்டு: பெரும்பாக்கம் - சென்னை செம்மஞ்சேரி இடையே செல்லும் மழைநீர் கால்வாய் சிறிதாக உள்ளதால் உயர்மட்ட கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு அந்த மழைநீர் கால்வாய் மீது உயர்மட்ட பாலம் அமைக்க ஆணை பிறப்பித்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

செம்மஞ்சேரியில் ரூ. 3.51 கோடி உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியகருப்பன், "மழைக்காலங்களில் ஒட்டியம்பாக்கம், தாழம்பூர் போன்ற பகுதியை சுற்றியுள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட ஏரிகளிலிருந்து வெளியேறும் நீரானது இந்த கால்வாய் வழியாக செல்கிறது.

சிறிய பாலமாக இருப்பதால் தண்ணீரை விரைந்து வெளியேற்ற முடியாமல் இருந்ததால் தற்பொழுது 3.51 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலத்தை அமைக்க முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும், சென்னையை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளை மாநகராட்சிகளில் இணைப்பது குறித்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், குடிசை மாற்று வாரிய இயக்குநர், திமுக பகுதி செயலாளர்கள் பெருங்குடி எஸ்.வி.ரவிசந்திரன், மதியழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: பழங்குடியினர் 51 பேருக்கு பசுமை வீடுகளை வழங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.