ETV Bharat / state

கஞ்சா வேட்டை 22 பேர் கைது; ஆக்‌ஷனில் இறங்கிய தாம்பரம் போலீஸார் - cannabis and Nattu vedigundu seized

தாம்பரம் மாநகரில் போலீசார் மேற்கொண்ட கஞ்சா வேட்டையின் ஒருபகுதியாக, 26 கிலோ கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 10, 2023, 11:11 PM IST

செங்கல்பட்டு: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் கஞ்சாவை அறவே ஒழிக்கும் பொருட்டு கடந்த 7,8 ஆகிய தேதிகளில் அனைத்து காவல்நிலைய எல்லையிலும் 'சிறப்பு கஞ்சா ஒழிப்பு வேட்டை' நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் படி, மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினரும், காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், கடந்த இரண்டு நாட்களாக நடத்திய கஞ்சா வேட்டையில், 22 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவர்களிடம் இருந்து 26 கிலோ கஞ்சா, ஒரு நான்கு சக்கர வாகனம், மூன்று இரு சக்கர வாகனங்கள், ஏழு கைபேசி, ஒரு எடை மெஷின், ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 22 நபர்களும் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கஞ்சா வேட்டை தொடரும் என்றும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

அதேபோல், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பீர்க்கன்கரணை, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாழம்பூர் ஆகிய காவல்நிலைய எல்லையில் பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் உள்ள பெட்டிக்கடை, தேநீர் கடை, சிறு ஓட்டல்கள் ஆகியவைகளில் வெளிநாட்டு சிகரெட்கள் போலியாக தயாரித்து அந்த சிகரெட் பாக்கெட்டுகளில் போலி முத்திரை மற்றும் புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் (Tabacco Causes Painful Death) ஏதும் இல்லாமலும், அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதத்திலும், கள்ளத்தனமாக, சந்தையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பீர்க்கன்கரணை மற்றும் தாழம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள 37 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 720 சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா வேட்டை 22 பேர் கைது; ஆக்‌ஷனில் இறங்கிய தாம்பரம் போலீசார்

மேலும், இச்சிகரெட்டுகள் எங்கிருந்து யார் மூலம் அனுப்பப்படுகிறது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் கூறும் போது, ’படிக்கும் காலத்தில் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் போதை மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொள்வதோடு மட்டும் அல்லாமல் பெற்றோரையும் மனத்துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர். அவ்வாறான தீய செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் சென்று உடலையும், மனதையும் பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் இச்சமுதாயத்தையும் பாதுகாக்கவேண்டும்’ என்றார். மேலும், இத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினரையும் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: பித்தளை பொங்கல் பானை தயாரிப்பில் 5-வது தலைமுறையாக களமிறங்கிய பட்டதாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.