செங்கல்பட்டு: கோவளத்தில் அடுத்த மாதம் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் பற்றிய கணக்கெடுப்பு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
இதில் பல வெளிமாநிலத்தவர், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் பலர் இங்கு சட்டவிரோதமாகக் குடியிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 76 நபர்களைப் பிடித்து விசாரித்ததில் குறிப்பாக 16 பேர், முறையான ஆவணங்கள் இன்றியும், போலி ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் குடியிருந்து வந்தது தெரியவந்தது.
அவர்களைப் பிடித்து வழக்கு தொடுத்த நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார், மேலும் உள்ள வெளி மாநில வெளிநாட்டு நபர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அடுத்த மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோதமாக இப்பகுதிகளில் குடியிருந்த 16 பங்களாதேஷ் இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும்'