ETV Bharat / state

10, 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி - புதிய புத்தகம் குறித்த பயிற்சி

சென்னை: தமிழ்நாட்டில் 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் புதிய பாடத்திட்டம் நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்த நிலையில், 10, 12ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

10, 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய புத்தகம் குறித்த பயிற்சி
author img

By

Published : Jun 4, 2019, 9:00 PM IST

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தாண்டு 2, 3, 4, 5, 7, 8,10,12 ஆகிய வகுப்புகளுக்குப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப 10, 12ஆம் வகுப்பு பாடத்தினை நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கும் வகையில் அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி 1,440 முதன்மை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் மாவட்டத்திற்கு தலா மூன்று ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பின்னர் பயிற்சியளிக்க உள்ளனர். இந்த மாதம் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பாடவாரியாக மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர் ஆகிய இடங்களில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

10,12 ம்  வகுப்பு ஆசிரியர்களுக்கு
புதிய புத்தகம் குறித்த பயிற்சி

சென்னை,
புதிய பாடத்திட்டத்தின்  அடிப்படையில் இந்த ஆண்டு 2,3,4,5,7,8,10,12ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப 10,12 ம் வகுப்பு பாடத்தினை நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி 1440  முதன்மை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில் மாவட்டத்திற்கு தலா 3 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பின்னர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த மாதம்  11ந் தேதி துவங்கி 14ந் தேதி வரை பாடவாரியாக   மாநில கல்வியியல் மற்றும் ஆராய்சி நிறுவனம் சார்பில்   சென்னை,கோவை,நாமக்கல்,கிருஷ்ணகிரி, ஈரோடு ,அரியலூர் ஆகிய இடங்களில் குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.