தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில்,
- அரசுப் பள்ளிகள் மாணவர்கள் 90.60 விழுக்காடும்,
- அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவர்கள் 96.90 விழுக்காடும்,
- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மாணவர்கள் 99.1 விழுக்காடும்,
- இருபாலர் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 95.1 விழுக்காடும்,
- பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 96.8 விழுக்காடும்,
- ஆண்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 90.2 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பள்ளி அளவில் 99.1 விழுக்காடு தேர்ச்சிபெற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல் பாடவாரியாக பயின்ற மாணவர்களில்,
- அறிவியல் பாடத்தில் 93.9 விழுக்காடும்,
- வணிகவியல் பாடத்தில் 97.4 விழுக்காடும்,
- கலைப்பிரிவுகளில் 95.1 விழுக்காடும்,
- தொழிற்பாடப்பிரிவுகளில் 92.3 விழுக்காடும்,
- இயற்பியலில் 94.6 விழுக்காடும்,
- வேதியியலில் 95.7 விழுக்காடும்,
- உயிரியலில் 97.1 விழுக்காடும்,
- கணக்கு பாடத்தில் 96.9 விழுக்காடும்,
- தாவரவியலில் 91.1 விழுக்காடும்,
- விலங்கியலில் 93 விழுக்காடும்,
- கணினி அறிவியியலில் 98.2 விழுக்காடும்,
- வணிகவியலில் 97.7 விழுக்காடும்,
- கணக்குப் பதிவியலில் 97.7 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.