ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

author img

By

Published : Mar 29, 2019, 4:51 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றோடு முடிவடைந்தது.

10th exam

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14 ம் தேதி தொடங்கி இன்று (29 ம் தேதி) வரை நடைபெற்றது. இதில் மொழிப்பாடத் தேர்வான தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியம் 2 மணிக்கு துவங்கி 4.45 மணி வரையில் நடைபெற்றன. கணக்கு அறிவியல் சமூக அறிவியல் மற்றும் விருப்பமொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணி வரையில் நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்களும் 3,731 மையங்களில் தேர்வை எழுதினர். அதேபோல்152 சிறைவாசிகள் புழல் ,திருச்சி, பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 தேர்வு மையங்களில் எழுதினர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்தன. ஆனால் முக்கியப் பாடங்களான கணக்கு மற்றும் அறிவியல் தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Intro:பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தது

மகிழ்ச்சியுடன் பிரிந்த மாணவர்கள்

Body:சென்னை,
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14 ம் தேதி தொடங்கி இன்று (29 ம் தேதி) வரை நடைபெற்றது.
இதில் மொழிப்பாடத் தேர்வான தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியம் 2 மணிக்கு துவங்கி 4.45 மணி வரையில் நடைபெற்றன. கணக்கு அறிவியல் சமூக அறிவியல் மற்றும் விருப்பம் மொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணி வரையில் நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்களும் 3,731 மையங்களில் எழுதினர்.
அதேபோல்152 சிறைவாசிகள் புழல் ,திருச்சி, பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 தேர்வு மையங்களில் எழுதினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்தன. ஆனால் முக்கியப் பாடங்களான கணக்கு மற்றும் அறிவியல் தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி தேர்வினை எழுதிவிட்டு தங்கள் தோழிகளுடன் சந்தோஷமாக வாழ்த்து தெரிவித்து மாணவிகள் பிரிந்து சென்றனர். மேலும் மேல்நிலை வகுப்பில் சேர்ந்து பயில உள்ளதாகவும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கி 13-ஆம் தேதிக்குள் திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி 19 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடவும் அரசு தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.