ETV Bharat / state

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு! - rajya sabha

சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

மாநிலங்களவை
author img

By

Published : Jul 8, 2019, 7:00 PM IST

மே மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கலில் சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று பேரும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஏழு பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணிக் கட்சியான மதிமுகவைச் சேர்ந்த வைகோ ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தேசத் துரோக வழக்கில் வைகோவிற்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற குழப்பம் உள்ளது.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான இன்று திமுக சார்பில் வழக்கறிஞர் இளங்கோவும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோல அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆறு வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாதபட்சத்தில் 11ஆம் தேதியே மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பை வெளியிடுவார்.

Intro:Body:

தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

 கடந்த 1 மே தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலில் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சியை 7 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பாக தொமுச வை பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த வைகோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேச துரோக வழக்கில் வைகோவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா நிராகரிக்கப்படுமா என்ற குழப்பம் உள்ளது. 

இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான திங்கட் கிழமை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ திமுக சார்பாக மாநிலங்களவைக்கு இறுதி நாளான இன்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இதே போல அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில்  அன்புமணி ராமதாஸ்சும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

வேட்பு மனு பரிசீலினை செவ்வாய் கிழமையும், வேட்பு மனுக்களை  11 ம் தேதி திரும்ப பெறுவதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 6 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே 18 ம் தேதி தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாதபட்சத்தில் 11 ம் தேதியே மாநிலங்களை தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.