ETV Bharat / state

பொது மக்களின் ஒத்துழைப்பால் நல்ல முறையில் தேர்தல் முடிவடைந்துள்ளது - சத்யபிரத சாகு - தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறினார்.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
author img

By

Published : May 20, 2019, 9:08 AM IST

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு நிலவரங்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் இன்று (நேற்று) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி, சூலூர் - 79.48%, அரவக்குறிச்சி - 84.28%, ஓட்டப்பிடாரம் - 72.21%, திருப்பரங்குன்றம் - 74.17% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நான்கு தொகுதிகளிலும் பதிவான மொத்த வாக்குகளின் விழுக்காடு - 77.62

இதேபோல் மறுவாக்குப் பதிவு நடைபெற்ற 13 வாக்குச் சாவடி மையங்களான பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 8 மையங்கள் மற்றும் பண்ருட்டி, காங்கேயம், ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய மையங்களில் பதிவான மொத்த வாக்குகளின் விழுக்காடு 84.13 ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரசியல் கட்சிகள் தரப்பில் புகார் மனு பெறப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் சிறு சிறு புகார்கள் வந்தன.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிகாரிகள், காவல்துறை, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் நல்ல முறையில் தேர்தல் முடிவடைந்துள்ளது என்றார்.

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி*

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் நிறைவடைந்த வாக்குப்பதிவு நிலவரங்கள் சம்மந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு செய்தியாளர்களை சந்திதார்

நிலவரப்படி சூலூர்- 79.48%

அரவகுறிச்சி- 84.28%

 ஓட்டப்பிடரம்-72.21%

திருபரங்குன்றன- 74.17 %

வாக்குகள் பதிவாகியுள்ளது.
4 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்கு சதவிகிதம்- 77.62%

மறுவாக்கு பதிவு நடைபெறும் 13 வாக்கு சாவடி மையங்கலான

பூந்தமல்லி

பப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 8 மையங்கள்

பண்ருட்டி

காங்கேயம்

ஆண்டிபட்டி

பெரியகுளம்

ஆகிய மையங்களில் பதிவான மொத்த வாக்கு சதவிகிதம்   84.13 % வாக்குகள் பதிவாகியுள்ளன

 இதில் தமிழகம் முலுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது

கட்சிகள் தரப்பிலும் புகார் மனு பெறப்பட்டுள்ளது

 அரவக்குறிச்சியில்  மட்டும் சிறு சிறு புகார்கள் வந்தன

காவல்துறை, அரசியல் கட்சியினர் மற்றும் , மக்கள் நல் ஒத்துழைப்பினால் நல்ல முறையில் தேர்தல் முடிவடைந்துள்ளது

அதிக வாக்கு சதவிகிதம் பதிவாகியுள்ளது இதன் காரணமாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது....

Visual delivered

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.